சூப்பர் வேலை வாய்ப்புகள் வெளியாகி உள்ளது... 25 காலி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க!!!

3 months ago 5
ARTICLE AD

புதுக்கோட்டையில் மருத்துவம், குழந்தைகள் உதவி மைய அலுவலகத்தில் 25 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் கீழ் உள்ள சுகாதாரத்துறை பணியிடங்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஆயுஷ் சித்த மருத்துவ ஆலோசகர் 1
ஆயுஷ் ஹோமியோபதி மருத்துவ அலுவலர் 1
ஆயுஷ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் 3
ஆயுஷ் மருந்து வழங்குநர் 3
சிகிச்சை உதவியாளர் 5
பல்நோக்கு பணியாளர் 6  என மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ஆயுஷ் சித்த மருத்துவ ஆலோசகர் பதவிக்கு சித்த மருத்துவத்தில் இளங்கலை பட்டம் அல்லது எம்.டி முடித்திருக்க வேண்டும். ஆயுஷ் ஹோமியோபதி மருத்துவ அலுவலர் பதவிக்கு ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் அல்லது எம்.டி முடித்திருக்க வேண்டும்.

ஆயுஷ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு BNYS அல்லது யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் எம்.டி முடித்திருக்க வேண்டும். ஆயுஷ் மருந்து வழங்குநர் பதவிக்கு ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் சித்தா ஆகியவற்றின் பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சிகிச்சை உதவியாளர் பதவிக்கு அதற்கான டிப்ளமோ முடித்து அரசு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 8 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆயுஷ் சித்த மருத்துவ ஆலோசகர் - ரூ.40,000
ஆயுஷ் ஹோமியோபதி மருத்துவ அலுவலர் - ரூ.34,000
ஆயுஷ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் - ரூ.40,000
ஆயுஷ் மருந்து வழங்குநர் - ரூ.15,000
சிகிச்சை உதவியாளர் ரூ.13,000 முதல் ரூ.15,000
பல்நோக்கு பணியாளர் - ரூ.8,500 முதல் ரூ.10,000

இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. ஆகவே, விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை - 622 001.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மிஷன் வத்சால்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மைய அலுவலகத்திற்கு குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர், வழக்கு பணியாளர் தேவைப்படுகிறார்கள். இப்பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் 3
வழக்கு பணியாளர் 3

மொத்தம் 6 பணியிடங்கள்

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் பதவிக்கு சமூக பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 1098 அவசர எண்ணில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு. கணினி திறன் அவசியம்.

வழக்கு பணியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 1098 எண்ணில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

Read Entire Article