சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
3 weeks ago 2
ARTICLE AD
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில், திடீரென அரங்கேறிய ஒரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்த இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சிலர், அந்த நபரை உடனடியாகப் பிடிக்க முயற்சி செய்து விரட்டினர். இருப்பினும், அனைவரது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
சடசடவென மூடப்பட்ட கடைகள்: வெறுச்சோடிய பிரதான சாலை
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தென்பாதி பிரதான சாலையில் அடுத்தடுத்து பெட்ரோல் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பரவியதைத் தொடர்ந்து, அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவானது. இச்சம்பவத்தால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த அப்பகுதி வணிகர்கள், பாதுகாப்பு கருதி உடனடியாக தங்களது கடைகளின் அடைப்பான்களை இறக்கி பூட்டினர். இதனால் வழக்கமாக ஆட்களின் நடமாட்டத்துடனும், வாகனங்களின் சத்தத்துடனும் பரபரப்பாகக் காணப்படும் தென்பாதி சாலை, குறுகிய நேரத்திலேயே ஆள் அரவமற்று முற்றிலும் வெறுச்சோடிப் போனது.
மேலும், இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தப்பி ஓடிய நபரை தாமதமின்றி உடனடியாக கைது செய்து மக்கள் மத்தியில் உள்ள பயத்தைப் போக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் தீவிர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்களைச் சேகரித்த காவல்துறை: சிசிடிவி மற்றும் தடயங்கள் பறிமுதல்
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்குதல் நடந்த பகுதியைக் சுற்றியுள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், தீவிர விசாரணைக்காக அந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்குகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும், சாலையில் வீசப்பட்டு நொறுங்கிக் கிடந்த பெட்ரோல் பாட்டில்களின் கண்ணாடித் துகள்கள் மற்றும் இதர தடயங்களை போலீசார் சேகரித்து அள்ளிச் சென்றனர். தடயங்களை முழுமையாகச் சேகரித்த பின்னரே இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வேகமெடுத்துள்ளது.
குடும்பப் பிரச்சினையே காரணம்: காவல்துறையின் முதற்கட்ட விளக்கம்
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். அதில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்ட நபர் தென்பாதி குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த 22 வயதான நீலகண்டன் என்பது தெரியவந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் தகராறு காரணமாகவே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்து பெட்ரோல் பாட்டில்களை வீசியுள்ளார் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள நீலகண்டனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதேவேளையில், இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதச் சிறு காயமும் ஏற்படவில்லை. மேலும், பெட்ரோல் பாட்டிலை சாலையில் வீசி உடைப்பதற்கு முன்பாக, அவர் அதில் தீ பற்றவைக்கவில்லை என்பதையும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் திரி, துணி அல்லது தீப்பிடிக்க வைக்கும் எந்தவிதமானப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, இது பெட்ரோல் குண்டு வீச்சுச் சம்பவம் அல்ல என்றும், வெறும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய செயல் மட்டுமே என்றும் காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு, பொதுமக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Read Entire Article