சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் அடுத்த பெரிய ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு இந்திய அளவில் ரசிகர்களை உருவாக்கியுள்ளது. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பராசக்தி 2026 பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பாக வாழ் , குரங்கு பெடல் , கொட்டுக்காளி , கனா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மற்றொரு படம் வெளியாக இருக்கிறது.

#HouseMates - We watched it. We loved every bit of it. The unique concept, the entertainment and this new team’s sincere effort truly stood out and we knew we had to present it. @Siva_Kartikeyan @KalaiArasu_ @rajvel_hbk @Darshan_Offl @kaaliactor #ArshaBaiju @vinodhiniunoffl… pic.twitter.com/aA1ktL6T2Q

— Sivakarthikeyan Productions (@SKProdOffl) April 9, 2025

ஹவுஸ் மேட்ஸ் (HOUSE MATES)

ஃபேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES) கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் ( SOUTH STUDIOS ) படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். தற்போது இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி, பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.

ஹவுஸ் மேட்ஸ் படத்தை பார்த்ததாகவும் படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் தனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் இந்த படத்தை வழங்குவதாக சிவகார்த்திகேயன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.