சிவகங்கையில் வெங்காய விலை அதிரடி குறைப்பு... ரேஷன் கடைகளில் ரூ.35க்கு விற்பனை !

1 month ago 3
ARTICLE AD

சிவகங்கையில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை. 133 ரேஷன் கடைகளுக்கு முதற்கட்டமாக 15,000 கிலோ வரத்து – பொதுமக்கள் வரவேற்பு.

வெங்காயம் விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 133 ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 15,000 கிலோ வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலை

அண்டை மாநிலங்களில் நிலவி வரும் மாறுபட்ட காலநிலை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, தற்போது ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட சமையலில் முக்கியப் பொருளாக உள்ள வெங்காயத்தின் விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவிலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு சார்பில் வெங்காயத்தை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

வெங்காயம் ரேஷன் கடைகளில் ரூ.35க்கு கிடைப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம் முதற்கட்டமாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தை விலையை விட கணிசமாக குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தேவைக்கேற்ப கூடுதல் அளவில் வெங்காயத்தை கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் ரூ.55–ரூ.60க்கு விற்பனையாகும் வெங்காயம் ரேஷன் கடைகளில் ரூ.35க்கு கிடைப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article