தமிழில் முதன்மையாகவும்

தமிழ்நாடு கடைகள் நிறுவனச் சட்ட விதிகளின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை பிற மொழி எழுத்துக்களைவிட தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், சீர்திருத்த மொழியிலும் வைத்து பராமரிக்கப்படவேண்டும். தமிழ்நாடு கடைகள் நிறுவனச் சட்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள சட்டம் மற்றும் விதிகளின்படி, முதல் குற்றத்திற்கான (First Offence) அபராதத் தொகை ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) விதிக்கப்படும். அதேபோன்று, தமிழ்நாடு உணவு நிறுவனச் சட்ட விதிகளின் கீழ் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை பிற மொழி எழுத்துக்களைவிட தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், சீர்திருத்த மொழியிலும் வைத்து பராமரிக்கப்படவேண்டும். தமிழ்நாடு உணவு நிறுவனச் சட்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள சட்டம் மற்றும் விதிகளின்படி முதல் குற்றத்திற்கான (First Offence) அபராதத் தொகை ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) விதிக்க நேரிடும்.

தமிழ் பெரியதாக இருக்க வேண்டும்

தொழிற்சாலைகள் சட்ட விதிகளின் கீழ் தொழிற்சாலைகளில் தமிழ் பெயர் பலகை தொழிற்சாலையின் முகப்பில் முதன்மையாகவும் பிற மொழி எழுத்துக்களைவிட பெரியதாகவும் வைத்து பராமரிக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் சட்ட விதிகளை பின்பற்றாத தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள சட்டம் மற்றும் விதிகளின்படி அதிகபட்சமாக இரண்டு வருட சிறை தண்டனை அல்லது ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்) அல்லது இரண்டும் சேர்த்து அபராதமாக விதிக்கப்படும். அதுமட்டுமன்றி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைத்தல் தொடர்பாக, நிறுவனங்களை கண்காணிக்க தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அடங்கிய மாவட்ட அளவிலான குழு (District Level Committee) சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தங்களது நிறுவனத்தில் தமிழில் பெயர் பலகையினை வருகின்ற மே மாதம் 15ஆம் தேதிக்குள் வைத்து பராமரித்திடல் வேண்டும். வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதிக்கு பின்னர், தமிழில் பெயர் பலகை வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது மேற்குறிப்பிட்டுள்ள சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.