சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை முதல் - மாலை வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை முதல் - மாலை வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கானாடுகாத்தான் - ஆத்தங்குடி ( காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை)

கானாடு காத்தான், ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கொத் தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி உள்ளிட்ட பகுதிகள்.

தேவகோட்டை - கண்டதேவி ( காலை 10:00 மாலை 5:00 மணி வரை)

தேவகோட்டை நகர், ராம்நகர், உதையாச்சி, உடப் பம்பட்டி, எழுவங்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, திரு மணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை, பனங் குளம், மாவிடுதிகோட்டை, புளியால், காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை உள்ளிட்ட பகுதிகள். இளையான்குடி, புதூர், தாயமங்கலம், கண்ணமங்கலம், திருவள்ளூர், சாத்தனி, காடனி, கலைக்குளம், நகரகுடி, அதிகரை, குமாரக்குறிச்சி, புதுவயல், சாக்கோட்டை, கண்டனூர், வேங்கா வயல், சாக்கவயல், மித்ராவயல், ஆம்பக்குடி, தச்சக்குடி, மாத்தூர், பெரியகோட்டை, இழுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர், செங்கரை மற்றும் சுற்றுப்பகுதிகள்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க.