சிவகங்கை மாவட்டம் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது நடைபெறவுள்ளது -

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, தகவல்.

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

இந்திய அரசு, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், இயக்குநரகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை ஆகியவைகள் இணைந்து நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற 10.11.2025 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை நடத்தவுள்ளனர். இத்தொழிற்பழகுநர் பயிற்சி மேளாவில் புதிய நிறுவனங்களும் கலந்து கொண்டு, Apprenticeship portal-ல் பதிவு செய்தபின் பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம். எனவே, Apprenticeship பயிற்சிக்கு ITI ல் NCVT, SCVT பயிற்சி பெற்று தேர்வான பயிற்சியாளர்களும், Fresher Apprenticeship பயிற்சிக்கு 8th, 10th, +2 மற்றும் Degree முடித்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட கூடுதல் விவரத்திற்கு

கூடுதல் விபரங்களுக்கு 04575 - 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9342192184, 8883458295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநர் அவர்களை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முதல் மாடி, சிவகங்கை என்ற முகவரியிலோ நேரில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.