தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II (தொகுதி- II மற்றும் தொகுதி- II A) தேர்விற்கென, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 8,749 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 28.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II (தொகுதி- II மற்றும் தொகுதி- IIA) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பெறும் தேர்வுக்கான அறிவிப்பு.

தேர்வு நாள்: 28.09.2025 முற்பகல்

தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டிய நேரம் : 9.00 மணி

விடைத்தாட்கள் (OMR Sheet) விநியோகிக்கும் நேரம் : 9.00 மணி

வினாத்தாட்கள் விநியோகிக்கும் நேரம் (Question Paper) : 9.15 மணி

தேர்வு ஆரம்பிக்கும் நேரம் : 9.30 மணி

தேர்வு முடியும் நேரம் : 12.30 மணி

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 8,749 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

இத்தேர்விற்கென, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 8,749 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்விற்கு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் சிவகங்கையில் 16 இடங்களிலும், தேவகோட்டையில் 04 இடங்களிலும், காரைக்குடியில் 10 இடங்களிலும் தேர்வு நடைபெறவுள்ளது. அதுமட்டுமன்றி, இத்தேர்வு பணிக்கென 07 நடமாடும் குழுக்களும், 04 பறக்கும் படை குழுக்களும் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்

மேலும், தேர்வு மையத்திற்கு தேர்வாளர்கள் 9.00 மணிக்குள் வருகை புரியவேண்டும், 9.00 மணிக்கு மேல் வருகைபுரியும் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமார்கள், எந்த தளர்வுகளும் கிடையாது எனவும், தேர்வெழுதச் செல்லும் தேர்வாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட் (Hall Ticket ) மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வருகை புரியவேண்டும். அதுமட்டுமன்றி, செல்லுலார் போன்கள் (Cellular Phones), மின்னனு கடிகாரங்கள் (Electronic Watches), புளுடூத் சாதனங்கள் ( Bluetooth Devices), தகவல் தொடர்பு சாதனங்கள் (Communication chip), பிற மின்னணு சாதனங்கள் மற்றும் கைப்பைகள் ஆகியவைகள் கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு போதுமான போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II (தொகுதி- II மற்றும் தொகுதி- II A) தேர்வினை, தேர்வாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் எழுதிட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.