சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்

பீகாரைச் சோ்ந்த 16 வயது சிறுமி 6 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்துள்ளார். அவா், நீலாங்கரையில் தங்கி அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ரூபன் ( வயது 19) என்பவா் அறிமுகமாகி பழகியுள்ளாா். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியுள்ளனா்.

இதைப் பயன்படுத்தி அண்மையில் ரூபன், கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று அவரை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பரான நாகலாந்தைச் சோ்ந்த ஆலன் உசேன் ( வயது 19) என்பவரும் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

வீடியோ வெளியிடுவோம் - மிரட்டல்

தாங்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ பதிவு செய்திருப்பதாகவும், வெளியே கூறினால் சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் ரூபன் அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளாா்.

இது குறித்து அந்தச் சிறுமி நீலாங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரூபனை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஆலன் உசேனை தேடி வருகின்றனர்.