தமிழ் திரையுலகில் நடிகர்கள், நடிகைகளை போன்று பின்னணி பாடகர்களுக்கும் தனி மரியாதை இருக்கிறது. பின்னணி பாடகர்களில் டிஎம்எஸ் முதல் எஸ்பிபி, மலேசியா வாசுதேவன், கே. ஜே. யேசுதாஸ் போன்ற லெஜண்ட் வரிசையில் இடம்பிடிக்காவிட்டாலும் ஓரளவிற்கு ரசிகர்களின் ரசனை வென்றவர் கிரிஷ். இவர் தமிழில் வெளியான காதல் படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன் பின்னர், வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, நண்பன், வாரணம் ஆயிரம், மங்காத்தா, துப்பாக்கி என பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

காதலில் விழுந்த சங்கீதா

கிரிஷ் தனது காதல் திருமணம் குறித்து அண்மையில் பகிர்ந்திருந்தார். அப்போது, சங்கீதாவும் நானும் ஒரு விருது வழங்கும் விழாவில் தான் முதல் முறையாக பார்த்தேன். விழா முடிந்த பிறகு சினிமா செலிபிரிட்டி அனைவரும் சாப்பிட அமர்ந்தோம். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். சங்கீதாவிற்கு என்னை பார்த்ததும் பிடித்து விட்டது. அவர் என்னிடம் பேச துடித்துக்கொண்டிருந்தார். என்னடா இது வம்பா போச்சு என்று நினைத்து கொஞ்சம் பயம் இருந்தது. எனது போன் நம்பரை கேட்டார் நான் கொடுக்கவில்லை. அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டேன். அப்புறம் நடிகை ராய் லட்சுமியிடம் என் போன் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். இருவரும் பேச ஆரம்பித்தோம் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது என தெரிவித்தார்.

பிணத்தில் மேல தான் திருமணம்

பிறகு காதல் திருமணத்தில் நடந்த கலாட்டாவை தெரிவித்த கிரிஷ் கொஞ்சம் எமோஷனலாக கூறினார். அதில், நான் எங்க காதல் விசயத்தை அப்பா, அம்மாவிடம் தெரிவித்தேன். உடனே எங்க அம்மா காதல் திருமணத்திற்கு எதிராக நின்றனர். என் பிணத்தில் மேல தான் திருமணம் நடக்கும் என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தேன். எனக்கு சங்கீதா தான் பொண்டாட்டி. அவள் எனக்காக எல்லாத்தையும் விட்டு வந்திருக்கிறாள் என தெரிவித்தேன். பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. என்னை விட சங்கீதா வயதில் மூத்தவர் என்பதும் எங்க வீட்டில் எதிர்ப்புக்கு காரணமாக இருந்தது தெரிவித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமிர் பிடித்த பையன்

திருமணம் குறித்து பேசிய கிரிஷ் தனது சினிமா பயணம் குறித்தும் ரொம்ப திமிரோட இருந்ததாகவும் வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய சிறிய வயதில் ரொம்ப திமிருடன் இருந்தேன். அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலைக்கு சென்றதால் பண்ணாத அட்டூழியம் இல்லை, நிறையவே செய்திருக்கிறேன். என்னுடை செயலில் திமிரும் ஆணவமும் அதிகமாக இருந்தது என தெரிவித்தார்.

சினிமா நிறைய கற்று கொடுத்தது

சினிமாவில் யாருடைய சிபாரிசு இல்லாமல், ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டு கஷ்டப்பட்டு வந்த வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். சினிமா எனக்கு மரியாதை, ஒழுக்கம் கற்று கொடுத்தது. நாம் பக்குவமா இருந்தால் தான் மக்கள் நம்மை மதிப்பார்கள். காலரைத் தூக்கி விட்டுகிட்டு போனா கொஞ்ச நாள் வேணா பார்ப்பதற்கு துரு துருனு நல்லா இருக்கும், காலப்போக்கில் நம்மை வெறுத்துடுவாங்க. சினிமாவில் மட்டும் இல்லை எப்போதும் பணிவு வேண்டும் என கிரிஷ் தெரிவித்திருக்கிறார்.