திரைத்துறை என்ன தீண்டத்தகாத துறையா? திரைத்துறையில் இருந்து தான் பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள் என திரைத்துறையினருக்கு அரசு பதவிகள் கொடுக்கப்படுவது குறித்த விமர்சனத்திற்கு அறநிலையதத்துறை தேர்வுக்குழு உறுப்பினரும் பின்னணி பாடகருமான வேல்முருகன் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு நடைபெறும் பக்தி கச்சேரியில் பாடல் பாட வந்த அறநிலையத்துறை தேர்வுக்குழு உறுப்பினரும் பிரபல பாடகருமான வேல்முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நவராத்திரியை முன்னிட்டு கோயில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மையை தரிசனம் செய்து பார்வையிட்டார்.

அனைத்து துறையும் சிறப்பாக உள்ளது

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தமிழகத்தில் உள்ள அனைத்து துறையும் சிறப்பாக உள்ளது. இதனை மக்கள் வாழ்த்துகிறார்கள் என்று தெரிவித்தார். முதன்முறையாக இந்த நவராத்திரி நாளில் இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று நான் பாட வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இயல், இசை, நாடக பிரிவில் தலைவராக கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளது உண்மையிலே சந்தோஷமாக உள்ளது என்றும் நாட்டுப்புற கலைக்கும் கிராமிய கலைக்கும் தமிழக முதல்வர் மகுடம் சூட்டியுள்ளார் எனவும் பெருமிதம் தெரிவித்த அவர், தமிழக முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கிராமிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார், அவர் கட்சி துவக்க விழாவிலும் கிராமிய பாடகிகள் நாட்டுப்புற கலைஞர்களை பாட வைத்துள்ளார். தானும் மூன்றாவது ஆண்டு கட்சி துவக்க விழாவில் பாடியுள்ளேன் என்றும் கூறினார்.

திரைத்துறை என்ன தீண்டத்தகாத துறையா?

மேலும், எல்லாத் துறையிலும் உள்ள பதவி யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நிதானமாக சரியாக யோசனை செய்து கொடுத்துள்ளார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்ற அவர், திரைத்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் திரைத்துறையினருக்கு அரசு முக்கிய பதவிகள் அளிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திரைத்துறை என்ன தீண்டத்தகாத துறையா? திரைத்துறை என்பதும் ஒரு தொழில் தானே என்றும் திரைத்துறையிலிருந்து தான் பல துறையினருக்கும் பல ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள் எனக்கூறிய அவர், திரைத்துறையும் அரசுத்துறையும் மக்களும் ஒன்றுதான் என ஆவேசமாக பதிலளித்தார்.