சித்ரா பவுர்ணமி: தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கல தேவி கண்ணகி கோவிலில் சிறப்பு வழிபாடு

7 months ago 5
ARTICLE AD

சித்ரா பவுர்ணமி இன்று தமிழக, கேரள  இரு மாநில எல்லையில், தேனி மாவட்டம் கூடலூர் பளியன் குடியிருப்பு பகுதியின் மலை உச்சியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஒரு நாள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பளியன்குடி வழியாக தமிழக வனப்பகுதியில் சென்று கண்ணகி கோவிலில் பொது மக்கள் வழிபாடு செய்தனர்.

கோவில் அமைவிடம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து கூடலூர் அருகே உள்ள வண்ணாத்திப்பாறை, தமிழக - கேரள எல்லை பகுதியான பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள மங்கலதேவி மலையில் சுமார் 4,830 அடி உயரத்தில் கண்ணகி கோவில் உள்ளது. 1975 ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த அனந்த பத்மநாபன், அறநிலையத்துறை ஆணையர் ஆர்.சி.பண்டா, நில அளவை தலைமை இயக்குனர் முருகேசன் ஆகியோர் கேரள மாநில அதிகாரிகளுடன் மலைப்பாதை வழியாக கண்ணகி கோவிலுக்கு சென்று கோவில் நிலத்தை அளந்து இக்கோவில் தமிழக எல்லையில் இருப்பதை ஆவணங்களின் வழியாக உறுதிப்படுத்தினர்.

சித்ரா பவுர்ணமி முழுநிலவு விழா

தமிழக, கேரள  இரு மாநில எல்லையில், தேனி மாவட்டம் கூடலூர் பளியன் குடியிருப்பு பகுதியின் மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இது மதுரையை எரித்த கண்ணகி சினம் தணிந்து வானுறை சென்ற இடமாக சிறப்பு பெற்றது என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா தமிழக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு  சித்ரா பவுர்ணமி முழுநிலவு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள கண்ணகி கோவிலுக்கு செல்லும் தமிழக பக்தர்கள் பளியன் குடியிருப்பு பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக 6 கி.மீட்டர் தூரம் நடந்தும். தற்போது அந்த பாதையை வனத்துறையினர் சீரமைத்துள்ளனர். விழாவில் முதல் நிகழ்ச்சியாக பள்ளி உணர்த்துதலும், அதன்பிறகு மலர் வழிபாடு, மங்கல இசை, பொங்கல் வைத்தல், அவல் பிரசாதம் வழங்குதல், பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மனுக்கு பூஜையில் வைக்கப்பட்ட மங்கல நாண் வளையல்களை பெண் பக்தர்களுக்கு வழங்குதல், நாட்டுப்புற பாடல்கள் பாடி வழிபாடு நடத்துதல் மற்றும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவின் நிறைவாக பூமாரி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் மாலை வரை கம்பம் நகரில் இருந்து குமுளி மற்றும் பளியன்குடி வரை அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தமிழகம் சார்பில் சாலை அமைக்க கோரிக்கை

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இக்கோவிலில் மக்கள் ஒரு வாரம் தங்கி இருந்து கொண்டாடிய சித்திரை முழுநிலவு விழா காலப்போக்கில் கேரள வனத்துறையின் கெடுபிடியால் மூன்று நாள் விழாவாக குறைக்கப்பட்டது. பின்னர் ஒரு நாள் விழாவாக மாறி தற்போது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே என சுமார் 8 மணி நேர விழாவாக குறைக்கப்பட்டுள்ளது. பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக கோவிலுக்கு நிரந்தர சாலை அமைக்க வேண்டும் அப்படி நிரந்தர சாலை அமைத்தால் தமிழக எல்லையிலுள்ள தமிழ் கடவுள் கண்ணகியை தமிழர்கள் சென்று வழிபட தடை ஏதும் இருக்காது. தமிழக பக்தர்கள் நீண்டகால கனவான பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள வழி சாலையை அமைத்தால் தான் கண்ணகி கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும் எனவும், பளியன்குடி சாலையை அமைக்க வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Read Entire Article