சிங்கப்பெண்களுக்கு சிந்தூர் என பெயர்.. இனி இதான் ட்ரெண்ட் போல.. பெருமிதத்தில் பெற்றோர்

11 months ago 11
ARTICLE AD

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து இன்ஸ்பயராகி தங்கள் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் சூட்டுவது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 2 நாள்களில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சிங்கப்பெண்களுக்கு சிந்தூர் என பெயர்:

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாள சுற்றுலா பயணி உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள பல ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல், ரஷிய நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய ராணுவம் நடத்திய தாக்கதலில் இருந்து இன்ஸ்பயராகி தங்கள் பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் சூட்டி இருக்கின்றனர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். குஷிநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். ஆர்.கே. ஷாஹி இதுகுறித்து கூறுகையில், "கடந்த மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் புதிதாகப் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிந்தூர் என்று பெயரிட்டுள்ளனர்" என்றார்.

இனி இதான் ட்ரெண்ட் போல:

ஒரு விஷயம் பிரபலமாகிவிட்டால் அதனை பெயராக குழந்தைகளுக்கு சூட்டுவது ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா காலத்தில் பல குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் வைக்கப்பட்டது. அதேபோல் கார்கில் போர் சமயத்தில் பலருக்கு கார்கில் என பெயர் வைக்கப்பட்டது.

பிரபலமான கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோரின் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவது பல காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக, 1990களில் பலக் குழந்தைகளுக்கு சச்சின் என பெயர் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு சிந்தூர் என பெயர் வைத்தபோதே அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. உணர்வுகளை தூண்டும் விதமாகவும் பெண்களை வைத்து அரசியல் செய்யும் வகையிலும் இப்படி பெயர் வைக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, இந்து பெண்கள் மட்டுமே சிந்தூர் (பொட்டு) வைப்பதால் மதச்சார்பற்ற நாட்டில் இப்படி செய்யலாமா என கேள்வி எழுந்தது. அதிலும், திருமணமான பெண்கள் மட்டுமே நெற்றியின் மேல் சந்தூர் வைப்பதாகவும் பலர் குற்றம்சாட்டினர்.

Read Entire Article