சிஎஸ்கே சரியாக விளையாடவில்லை - ஓபனாக பேசிய காசி விஸ்வநாதன்

7 months ago 5
ARTICLE AD

புதுச்சேரி: சென்னை அணி நல்ல அணி, சரியாக ஆடவில்லை, அது உண்மை தான் வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது என புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் அகாடமி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உள்ள கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்கப்படுத்த சூப்பர் கிங்ஸ் அகாடமி நிறுவப்பட்டு உலககெங்கிலும் 25 க்கும் மேற்பட்ட சூப்பர் கிங்ஸ் அகாடமி கிரிக்கெட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றனது. இந்நிலையில் புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முதல் பயிற்சி மையம் மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ( StandsFord School) திறக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிவ சங்கரன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

சென்னை அணி சரியாக ஆடவில்லை

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை அணி நல்ல அணி, சரியாக ஆடவில்லை அது உண்மைதான் வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கைநழுவி சென்று விட்டது

இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது. தொடர் தோல்வி, புள்ளி பட்டியலில் கடைசி இடம் என அதள பாதளத்தில் CSK அணி சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கைநழுவி சென்று விட்டது என்று தான் கூறப்படுகிறது.

8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது CSK . மீதம் உள்ள 6 போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளில் வெற்றி தோல்விகளும் இனி CSK பிளே ஆப் வாய்ப்பை பாதிக்கும் சூழல் நிலவி வரும் சூழலில் ரசிகர்கள் இனி அடுத்த சீசன் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

Read Entire Article