சி.வி.சண்முகத்திற்கு அரசியல் தெளிவு பிறந்திருக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை

4 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: சி.வி.சண்முகத்திற்கு இப்போதாவது அரசியல் தெளிவு பிறந்து இருக்கும் என நம்புகிறேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கே துரோகம் செய்கிற ஒட்டுமொத்த கூட்டமாக தான் அந்தக் கூடாரம் திகழ்கிறது என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

தஞ்சை மத்திய மாவட்ட திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக மாவட்ட செயல்பாட்டு அறை திறப்பு விழா தஞ்சாவூர், புது ஆற்றுக்கரை ஜெயராம் மஹால் அருகில் திறக்கப்பட்டது. இதனை  தொழில்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா,  உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

சி.வி.சண்முகத்திற்கு இப்போதாவது அரசியல் தெளிவு பிறந்து இருக்கும் என நம்புகிறேன். அதைப்பற்றி பேசவே நாங்கள் தரக்குறைவாக நினைக்கிறோம். ஜெயலலிதா பெயரை போட்டு பல திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறோம். அதையும் அவர்கள் குறை சொல்கிறார்களா? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கே துரோகம் செய்கிற ஒட்டுமொத்த கூட்டமாக தான் அந்தக் கூடாரம் திகழ்கிறது. அதற்கு இவர் உதாரணமாக திகழ்கிறார் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை பார்த்து அவர்களுக்கு வயிற்றெரிச்சல். அவர்கள் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. தற்போது செய்பவர்களையும் நிறுத்துவதற்காக அவர்கள் பார்க்கிறார்கள். உச்சநீதிமன்றம் இதற்கு சரியான நியாயம் தெரிவித்து இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கும்பகோணத்தில்...

இதேபோல் கும்பகோணத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அண்ணா அறிவகத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் தான் தமிழகம் என்றுமே செழிப்போடு வளர்ந்துள்ளது. 2011க்கு பிறகு இருந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் எப்படி தத்தளித்தது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். இப்போது ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுகிறார். எல்லாவற்றையும் செயல்களாகவும் மாற்றி காட்டுகிறார். எல்லாமே வெறும் சொல்லல்ல செயல் என்று நிரூபித்து காட்டுகிறார். ஒரு திட்டத்தை அறிவித்தால் உடனடியாக செயல்படுத்துகிறார்.

ஒரு முதலீடு கிடைக்கின்றது என்றால் அதன் மூலம் முதலில் அடிக்கல் நாட்டி பின்னர் திறப்பு விழா செய்துவிடுகிறார். சமீபத்தில் கூட வின் ஃபாஸ்ட் என்ற கார் நிறுவனம் 17 மாதங்களுக்குள் திறக்கப்பட்டது. இது போல இந்தியாவிலேயே வரலாற்றில் எங்கும் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் முதலீடு வருமா என்ற அறிவிப்பு மிகவும் குறைவு. அதுவும் அறிவிப்புகளோடு நின்றது தான் வரலாறு.

அதனால்தான் அந்த 10 ஆண்டுகால இருண்ட ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த விதமான பெரிய வளர்ச்சியும் கிடைக்கவில்லை. தற்போது கூட அந்த பெருமை என்னுடையது என்று அவர் சொல்லிக்கொள்ளாமல், இதற்காக ஒட்டுமொத்த அமைச்சகமும், அரசு அதிகாரிகளும், மக்களும் வேலை செய்துள்ளனர் என்று சொல்லி அனைவரையும் இணைத்து, அரவணைத்து செயல்படக்கூடிய ஒரு மாபெரும் முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம். இதனை அவர் சொல்லும் போது அனைவரும் மகிழ்ந்தோம். உண்மையாகவே இது டீம் தமிழ்நாட்டினுடைய வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article