பெண்களுக்கு சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. வரும் 17-ம் தேதியே கடைசி நாள். விண்ணப்பம் எப்படி செய்யறதுன்னு முழுமையான விபரங்கள் உள்ளே.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) செயல்படுகிறது. இங்கு சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு குறிப்பிட்ட கல்வித்தகுதி கட்டாயமில்லை. அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

சமுதாய வளப் பயிற்றுநர் தகவல் தேடுதல், தகவல் சேகரித்தல், புதிய தகவல்கள் சேர்த்தல் மற்றும் தகவல் தொகுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தகவல் தேடுதல் - பயிற்சிக்கு தேவையான தகவல்களை தேடி சேகரிப்பவராக இருக்க வேண்டும்.
தகவல் சேகரித்தல் - பயிற்சிக்கான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
புதிய தகவல்கள் சேர்த்தல் - காலத்திற்கு ஏற்ப புதிய தகவல்களை சேகரிக்க வேண்டும்.
தகவல் தொகுத்தல் - தேவையான நேரத்தில் தகவல்களை வழங்குபவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு இல்லை. கல்வித்தகுதி கட்டாயமில்லை. நல்ல உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் போதுமானது. சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10ல் கலந்துகொண்டு இருந்திருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு செல்போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும். குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் தேவை.

அரசியலில் பொறுப்புகளில் இருக்கக்கூடாது. தனியார் நிறுவனங்களில் முழு நேரம் அல்லது பகுதி நேரம் பதிவியில் இருக்கக்கூடாது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்சி நடைபெறும் காலத்தில் அதற்கான மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படும். மாத ஊதியம் கிடையாது.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் உரிமை கோர முடியாது.

ஆர்வமுள்ள பெண்கள் https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதார்களின் அடிப்படை தகவல்கள், மொழி திறன், கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து, புகைப்படம், கல்வித்தகுதி நகல் மற்றும் குழு பரிந்துரை தீர்மானம் இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு.

எழுத்துத் தேர்வு, நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். இப்பணி தொடர்பான விவரங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண் : 0451 - 2460050 அல்லது உதவி திட்ட அலுவலர் 9944133895 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.