சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நேரமும், வழித்தடமும் இதோ!

1 month ago 3
ARTICLE AD

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது தெற்கு ரயில்வே  நிர்வாகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து வருகிற 14-ந்தேதி முதல் ஜனவரி 16-ந்தேதி வரையில் வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண்.06111 மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்திலிருந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி வரையில் சனிக்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும். சென்னை சென்டிரலிலிருந்து வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06113), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்திலிருந்து வருகிற 17-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரையில் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06114), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரையில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06119), மறுநாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்திலிருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06120), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். சென்னை சென்டிரலிலிருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06127), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, கொல்லத்திலிருந்து வருகிற 21-ந்தேதி முதல் ஜனவரி 23-ந்தேதி வரையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.சென்னை சென்டிரலிலிருந்து வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி 24-ந்தேதி வரையில் சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06117), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06118), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article