சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய்... கடந்த ஆண்டை விட எவ்வளவு வசூல் வந்தது?

11 months ago 7
ARTICLE AD

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்து ஜனவரி 20ம் தேதி காலையுடன் கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் இந்த ஆண்டு கிடைத்த உண்டியல் காணிக்கை, பிரசாத விற்பனை, பார்க்கிங் உள்ளிட்டவைகள் மூலம் கிடைத்த வருமானம் கணக்கிடப்பட்டு வந்தது. தற்போது இதுகுறித்த விபரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. இதன்படி சபரிமலை கோவில் வருமானம் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு 80 கோடி வரை அதிகரித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல - மகரவிளக்கு பூஜை காலத்தின் போது கடந்த 2 மாதங்களில் கிடைத்த வருமானம் குறித்த தகவல்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல பூஜையும், டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை மகரவிளக்கு உற்சவமும் நடைபெற்றது. இந்த 2 மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிடைத்துள்ள வருமானம் ரூ.440 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.80 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு சபரிமலை வருமானம் ரூ.360 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ரூ.440 கோடி வருமானம் என்பது சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் பெறப்பட்ட உண்டியல் காணிக்கை மற்று பிரசாத விற்பனையில் மூலம் கிடைத்தது மட்டும் தான்.

வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின்

பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் கிடைத்த வருமானங்கள் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருவதால் இந்த ஆண்டு சபரிமலை மொத்த வருமானம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தினமும் விர்சுவல் க்யூ மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமாக 80,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் இந்த ஆண்டு சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம் அமைச்சர் வி.என்.வாசன் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டு இதை விட அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்ப சீசனின் போது 53,09,906 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 10,03,305 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமாக வந்து தரிசனம் பார்த்தவர்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 6,32,308 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு ஒரு நிமிடத்தில் 80 முதல் 90 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி ஐயப்பனை தரிசிக்க வைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 65 என்ற எண்ணிக்கையிலேயே இருந்தது. புகார் இல்லாத சுமூகமாக யாத்திரையாக இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை நிறைவடைந்துள்ளது. பல்வேறு துறைகளின் சிறப்பாக பணியாற்றியதால் பக்தர்கள் இந்த ஆண்டு எவ்வித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் முந்தைய காலங்களில் இருந்த சிறு சிறு குறைபாடுகளும் சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article