சனாதனத்தை அழிப்பீங்களா? செருப்பை வீசிய பாஜகவினர்... அம்பேத்கர் பிறந்தநாளில் சர்ச்சை

8 months ago 5
ARTICLE AD

சட்டமாமேதை அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அம்பேத்கரின் திரு உருவசிலைகளுக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக சேலம் அம்பேத்கார் சதுக்கம் பகுதியில் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவசிலைக்கு அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் தமிழ்நாடு இளைஞர் இயக்கம், அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு கோஷங்களை எழுப்பினர். அப்போது இந்து சாதனத்தை வேரெடுத்த அம்பேத்கர் புகழ் ஓங்குக என்று கோஷம் எழுப்பினர். அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்த பாஜகவினர் கொந்தளித்து தாக்குமுயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பாஜகவினர் கீழே இருந்து செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தை தாக்குவதற்காக பாஜகவினர் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு மேலே ஏற முயன்ற நிலையில் காவல்துறையினர் தடுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கீழே இறங்கி வர சொல்லுங்கள் சும்மா விடமாட்டோம் என்று கூறி காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாஜகவினரை அமைதிப்படுத்தினர். பின்னர் தமிழ்நாடு இளைஞர் இயக்க நிர்வாகிகளை பின் வழியில் வழியாக இறக்க வைத்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இந்திய குடியரசு கட்சி மீண்டும் சனாதனம் குறித்து பேசிய நிலையில் கொந்தளித்த பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்யும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவினரை அனுப்பி வைத்தனர்.

Read Entire Article