சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!

11 months ago 7
ARTICLE AD

இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த பத்தாண்டுகளில், இது 44 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் , இந்தியாவின் உயிரி மருந்து, விண்வெளித் துறைகள் மற்றும் ஆளுகை, பருவநிலை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததாவது, ” இந்திய விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை  எடுத்துரைத்த அமைச்சர் இந்தத் துறையில் தனியார் முதலீட்டிற்கு அனுமதித்த சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், விண்வெளி பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக ( 800 கோடி டாலர் ) அதிகரித்துள்ளது என்றும், அடுத்த பத்தாண்டில் 44 பில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக  அமைச்சர் கூறினார்.

Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!

மேலு, அடுத்ததாக ககன்யான் திட்டம், எதிர்வரும் சந்திரயான் -4  திட்டம் 2027 செயல்படுத்தப்படும் , சுக்ராயன் (2028) மற்றும் இந்திய விண்வெளி நிலையம் (2030) போன்ற மைல்கற்கள் இந்தியாவின் வலுவான பாதையை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை  எடுத்துரைட்தார். நீடித்த வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் இயக்கமான பிரதமரின் லைஃப் திட்டத்தை  ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். நோய்த்தடுப்புக்கான சுகாதாரப் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை நிவர்த்தி செய்வதில் உலகத் தர அளவீடுகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் தலைமைத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

Read Entire Article