தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடியும், இசைத்தும் சத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவான நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடினர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது.

கடந்த 14ம் தேதி இவ்விழாவை மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதையடுத்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், வாய்ப்பாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடந்து வந்தது நிறைவு நாளான நேற்று அதிகாலையில் முன்னதாக தியாகராஜர் சிலைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தியாகராஜர் வாழ்ந்து மறைந்த அவரது இல்லத்தில் இருந்து உஞ்ச விருத்தி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சன்னதியை சென்றடைந்தது.

இதையும் படிங்க: SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி

பின்னர், காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து காலை 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு தியாகராஜ சுவாமிகள் வீதியுலா மற்றும் 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவை ஒட்டி இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த்து என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Sabarimalai : சபரிமலை ஐயப்பன் கோயில்! நடப்பாண்டுக்கான பூஜை நாளை மறு நாளுடன் நிறைவு..

பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பிரபல இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி ஆகியோர் கூறுகையில், ஆண்டுதோறும் தியாகராஜ சுவாமிகள் இசையஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தி வருகிறோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நிறைவையும் ஏற்படுத்தி வருகிறது. இசைபிரியர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே தங்களின் எண்ணமாக உள்ளது என்று தெரிவித்தனர். தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நிகழ்ச்சிரைய ஒட்டி திருவையாறு திருவிழா கோலம் பூண்டிருந்தது.