"சட்டவிரோத லாட்டரி விற்பனை" காவல்துறையினரின் ஒரு நாள் சிறப்பு வேட்டை - 12 பேர் அதிரடி கைது

7 months ago 5
ARTICLE AD

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய ஒரு நாள் சிறப்பு வேட்டையில் 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எஸ்பியின் உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர் புகார்கள் எழுந்து வந்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்ட விரோதமான லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டவிரோதமான லாட்டரி விற்பனை தொடர்பாக மாவட்டம் முழுவதும் காவல்துறையின் ஒரு நாள் சிறப்பு வேட்டையானது நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் சோதனை

சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி தலைமையில் அருண்குமார், சூரியமூர்த்தி, திருமுருகள், வீரராகவன், மற்றும் அருண்குமார் ஆகிய உதவி ஆய்வாளர்களுடன் ஐந்து சிறப்பு குழுக்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு தனிப்படையானது மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமான லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

12 பேர் அதிரடி கைது

அதனை தொடர்ந்து சட்ட விரோதமான லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரம் பணம், 9 செல்போன்கள் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் விபரம்

காவல்துறையினர் நடத்திய இந்த சிறப்பு லாட்டரி வேட்டை ஆப்ரேஷனில் ஆணைக்காரன் சத்திரம் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த கலியபெருமாள் என்பரது மகன் பாண்டியன், வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த வைரக்கண்ணு என்பவரது மகன் ராமதாஸ், சீர்காழி பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த பொன்னையன் என்பவரது மகன் முருகன், குத்தாலம் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த பாபுஷாகிப் என்பவரது மகன் ஜமீல் பாட்ஷா, சரவணன் மகன் மணி, பவுன் மகன் முத்து, செம்பனார்கோவில் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ராஜாங்கம் மகன் சுந்தரமூர்த்தி, நாராயணசாமி மகன் சிகாமணி, ராஜேந்திரன் மகன் வைத்தியநாதன், சிகாமணி மகன் முத்துக்குமார், ராஜேந்திரன் மகன் சத்தியமூர்த்தி, வைத்தியநாதசாமி மகன், செல்வம் , சிகாமணி மகன் வைத்தியநாதசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

நான்கு மாதத்தில் 30 பேர் கைது

நடப்பாண்டில் மட்டும் இதுவரை சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் பணமும், 10 செல்போன்கள் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோதமாக லாட்டரி விற்பளையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்ட விரோத லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read Entire Article