சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்! கருப்பு முருகானந்தம் வழக்கில் திடீர் திருப்பம்!

2 weeks ago 3
ARTICLE AD
<p>தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தவர் கருப்பு முருகானந்தம். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை பூர்விகமாக கொண்டவர். எம்பி, எம்எல்ஏ என எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடுபவர். இந்நிலையில் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.&nbsp;</p> <p>இந்நிலையில் பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த திவ்யா சேஷாத்ரி என்பவர் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நானும், அந்த பெண்ணும் மிக நெருக்கமாக இருந்ததாகவும், அவரை இழிவுப்படுத்தும் வகையில் மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறியிருந்தார்.&nbsp;</p> <p>இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளாமல் என் மீது திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 &nbsp;பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. தனது கணவரை பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று வேறொரு நண்பரும் மூலமாக அறிமுகமான அவருக்கு பல்வேறு உதவிகளை நான் செய்துள்ளேன்.</p> <p>இந்நிலையில், என் மீது பொய்யான புகாரை அந்த பெண் அளித்துள்ளார். ஆகையால் இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளி விசாரணைக்கு வந்தது. அப்போது கருப்பு முருகானந்தத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் காவல்துறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்பிங் செய்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாக கூறும் புகைப்படங்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>
Read Entire Article