கோவையை குலுக்கிய கோனியம்மன் தேர்விழா... தேர் நகர, பக்தர்கள் “அரோகரா” முழக்கம்...

1 month ago 6
ARTICLE AD

கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கோவையின் காவல் தெய்வமாக போற்றப்படும் கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 17ஆம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதுடன், அன்று இரவு அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது.

பட்டு அலங்காரத்தில் அம்மன்

விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. காலை 7 மணிக்கு உற்சவ அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதி அருகே அம்மன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. பட்டு உடையில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் எழுந்தருள, கோவில் அர்ச்சகர்கள் திருக்கல்யாணத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச்.04) தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி, ராஜவீதியில் உள்ள தேர்முட்டியில் இருந்து புறப்பட்டார். ஒப்பணக்கார வீதி, வைசாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாகச் சென்று மீண்டும் தேர்முட்டியை வந்தடைந்தார். முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Read Entire Article