கோவையில் மகளிர் தின கொண்டாட்டம் – பெண்கள் மட்டும் கலந்து கொண்ட மாரத்தான்

1 month ago 5
ARTICLE AD

கோவையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டியில் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு ஓடியது சிறப்பாக அமைந்தது.

சர்வதேச மகளிர் தினம் முன்னிட்டு பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.

மாரத்தான் ஓட்டப்போட்டியை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். அவருடன் பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் கே.ஜி. பத்வாட்சலம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். பெண்களின் உடல்நலம், தன்னம்பிக்கை மற்றும் சமத்துவ உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள், பணிபுரியும் பெண்கள், இல்லத்தரசிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஓடினர்.

போட்டியில் கலந்து கொண்ட பெண்கள், “பெண்களுக்கு சம உரிமை வேண்டும்”, “பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்”, “பெண்கள் பாதுகாப்பு அவசியம்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் ஓடியது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. மாரத்தான் போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Read Entire Article