தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, திருப்பூர் மற்றும் ஓசூர் ஆகிய 4 நகரங்களில் சுற்றுச் சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

4 நகரங்களில் ரிங் ரோடு:

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் , தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது . அந்த வகையில் கோவை, நெல்லை, திருப்பூர் மற்றும் ஓசூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுச்சாலை ( ) அமைக்க திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதற்காக, சுற்றுச்சாலை அமைப்பது தொடர்பான விரிவான அறிக்கையை தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நகரங்களில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, மேம்பாலங்கள், இணைப்பு சாலை உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டும் ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படுகிறது. மேலும், இந்த பகுதிகளில் எப்படி சுற்றுச்சாலை அமைப்பது, நிலம் ஏதேனும் கையகப்படுத்த வேண்டுமா உள்ளிட்ட நிலை குறித்தும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read: CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?

ரிங் ரோடு:

ரிங் ரோடு என்பது ஒரு நகரம் அல்லது நகரத்தை சுற்றி வளைக்கும் சாலையாகும், இது நகர மையத்தில் போக்குவரத்தைத் தவிர்க்க மாற்று வழியை ஏற்படுத்துகிறது.

ரிங் ரோட்டின் நோக்கம் நகர மையத்தில் போக்குவரத்தை குறைக்க, இணைப்பை மேம்படுத்த, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் என கூறப்படுகிறது. இதனால், ரியல் எஸ்டேட் மற்றும் இதர தொழில் வளர்ச்சியை மேம்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

ரிங் ரோடுகள் நகர மையத்தில், ஓட்டுநர்கள் மாற்றுப் பாதையில் செல்ல உதவுகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் முடியும் என கூறப்படுகிறது.

தற்போதுள்ள எண்ணூர் துறைமுகம், மகாபலிபுரம் மற்றும் NH-16 மற்றும் NH-48 ஆகியவற்றை இணைக்கும் 132.87 கிலோமீட்டர் சாலை. இது 2025 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.