கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்துடன் வெளியேறிய மக்கள்...

3 months ago 12
ARTICLE AD
<p>கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் வந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.</p> <p>கோவை ரேஸ்கோர்சில் உள்ள வழக்கறிஞர்கள் பயிற்சி மைய அலுவலகத்ரில் வழக்கம் போல் மின்னஞ்சல் தகவல்களை பணியாளர்கள் பார்த்து கொண்டிருந்தபோது நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் நீதிமன்றம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p> <p>ஆட்சியரகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், பள்ளிகளக்கு வெடிகுண்டு அனுப்பிய நபர் தான் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>
Read Entire Article