கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்தில் கொடூரர்கள் சிக்கியது எப்படி? ஐஜி சொன்ன தகவல்

1 week ago 3
ARTICLE AD

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். இவர்கள் இருவர் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக, கோவை டிஐஜி, டிஎஸ்பி ஆகியோருடன் இணைந்து கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்துப் பேசினார்.

புகார் வந்தவுடன் 5 தனிப்படைகள் அமைப்பு

செய்தியாளர் சந்திப்பில் ஐஜி ரம்யா பாரதி கூறியதாவது: "கடந்த 21-ஆம் தேதி இரவு, சிறுமி திடீரென காணாமல் போனதாகக் கூறி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகார் பெற்ற அடுத்த கணமே, காணாமல் போன சிறுமியை விரைந்து கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் இருந்த சுமார் 250 சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன."

ஆசைவார்த்தை கூறி கடத்தல்

போலீசாரின் விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கார்த்தி என்ற வாலிபர், அச்சிறுமியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி, நயமாகப் பேசி அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமி காணாமல் போது கார்த்தியும் சிறுமியை தேடியதாக ஐஜி தெரிவித்தார்

இதையும் படிங்க: CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!"மன்னிக்க முடியாத குற்றம்... குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உறுதி!" - முதல்வர் விஜய் அதிரடி!

உடந்தையாக இருந்தவருடன் சேர்த்து 2 பேர் கைது

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட முதன்மைக் குற்றவாளியான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த குற்றச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயல்பட்ட மோகன் என்பவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி மற்றும் மோகன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும். குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத்தர காவல்துறை தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மண்டல ஐஜி ரம்யா பாரதி திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும் கொலைக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்று ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.

Read Entire Article