கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிறுமியின் தாய், மகள் காணாமல் போன அன்று மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

கோவை சிறுமி கொலை

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் பாரதிபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 10 வயது சிறுமி கடந்த மே 22ம் தேதி மாலையில் திடீரென மாயமானாள். அருகிலுள்ள கடைக்குச் சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் சார்பில் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுமியை, அவரின் குடும்பத்துக்கு நன்கு பரீட்சையமான கார்த்தி என்ற நபர் அழைத்து சென்றது தெரிய வந்தது.

அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனிடையே சிறுமி அருகில் இருந்த குளக்கரை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டாள். பிரேத பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் இந்த விஷயத்தை தெரிந்து மறைத்ததாக கார்த்தியின் நண்பர் மோகன்ராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பக்கத்து வீட்டு பெண் வெளியிட்ட வீடியோ

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் என சொல்லப்படும் ஒருவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சிறுமி காணாமல் போன அன்று அவரது தாய் மதுபோதையில் இருந்தார். மே 23ம் தேதி காலையில் தான் மகள் காணாமல் போன விஷயம் அவருக்கு தெரியும். கொலை செய்யப்பட்ட கார்த்தியுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் இருக்கிறது. மிட்டாய் வாங்கி கொடுத்து எல்லாம் அந்த சிறுமியை அழைத்து செல்லவில்லை. போலீசார் விடிய விடிய தண்ணீர் கூட அருந்தாமல் சிறுமியை தேடினர் என அந்த பெண் கூறியிருந்தார்.

குடிச்சிருந்தது உண்மை தான்

இந்த நிலையில் சிறுமியின் தாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு தெரியாமல் மகளின் உடலை கணவர் குடும்பத்தினர் எரித்து விட்டதாக குற்றம்சாட்டினார். அப்போது அவரிடம் சிறுமி மாயமாகும்போது நீங்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு என் கணவர் மதுபழக்கம் உடையவர். குழந்தை காணாமல் போனதற்கு ஒருநாள் முன்பு கருப்பு கலர் குளிர்பானத்தில் மதுவை கலந்து அதனை ஃபிரிட்ஜில் வைத்திருந்தார். இதுதெரியாமல் நான் எடுத்து சிறிது குடித்தேன். ஒரு மாதிரி இருந்ததால் அப்படியே வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் எனக்கு தலைசுற்றல் மாதிரி ஏற்பட்டு நான் படுத்து விட்டேன். அந்த நேரத்தில் தான் குழந்தை கடைக்கு சென்றது. இப்படியாகும் என தெரியவில்லை. என் கணவன் ஏன் மதுவை ஃபிரிட்ஜில் வைத்திருந்தார். அதனை குழந்தை எடுத்து குடித்திருந்தால் என்னவாகி இருக்கும்? .. நான் அந்த வீட்டுக்கு சென்று ஒருமாதம் தான் ஆகியுள்ளது. என் வீட்டில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியுமா?.. நாங்களே குழந்தையை பறிகொடுத்த துக்கத்தில் இருக்கிறோம்" என சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.