கோவை சம்பவம் எதிரொலி... அதிர்ச்சியில் தமிழ்நாடு - பெண்கள் கையில் ‘பெப்பர் ஸ்பிரே”

1 month ago 3
ARTICLE AD

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கிய அதிமுகவினர்.

கோவையில் விமான நிலையம் பகுதியில் ஒரு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று வலுக்காட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. மறுநாள் இதுதொடர்பான செய்திகள் வெளியே வந்ததை அடுத்து, தமிழ்நாடே அதிர்ச்சிக்குள்ளானது.

சம்பவத்திற்கு காரணமாக மூன்று பேரை உடனே கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் வரை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றத்திற்கு காரணமானவர்களை தேடி வந்தனர்.

3 பேர் சுட்டுப்பிடிப்பு

இந்த நிலையில், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை இன்று காலை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். அவர்களை பிடிக்கும்போது தாக்க முயன்றதால், அவர்களின் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த அதிமுகவினர், பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி, பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியுள்ளனர். மதுக்கரையில் பேருந்தில் செல்லும் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

காவல் ஆணையர் விளக்கம்

முன்னதாக, மூன்று பேரை சுட்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்திருந்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ குணா (30), சதீஷ்(20), கார்த்திக் (21) ஆகியோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கைதான மூன்று பேர் மீது குற்ற வழக்குகள், கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில், சதீஷ், கார்த்திக் ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளன. குணா உறவினார் ஆவார்.

300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தோம். சதீஷ், குணா ஆகியோருக்கு இரண்டு காலிலும், கார்த்திக் என்பவருக்கு ஒரு காலில் குண்டு பாய்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Read Entire Article