கோவை: குடும்பத்துடன் தற்கொலை! ஜூனியர் இன்ஜினியர், மனைவி, சிறுமி மரணம் - அதிர்ச்சி தரும் காரணம்!

2 months ago 10
ARTICLE AD

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் கமலேஷ். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், எக்சிதா ஏஞ்சல் என்ற 10 வயது பெண் குழந்தையும் இருந்தார்கள். இவர்கள் மத்தம்பாளையம் அருகே உள்ள தம்பு நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலக்கியாவுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிகிறது .

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நாளுக்கு நாள் புற்றுநோய் தாக்கம் அதிகரித்ததால் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த கமலேஷ் பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கூட்டி சென்றும் சிகிச்சை பலனளிக்காததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளார் .

தற்கொலை முடிவை எடுத்துவிட்டு தன்னுடன்  பணியாற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி விட்டு உணவில் விஷம் கலந்து அந்த உணவை மூவரும் உண்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டை விட்டு மூவரும் வெளியே வராததால் அக்கம், பக்கம் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Read Entire Article