தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு பரமசிவன் மலை திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது மகா கும்பாபிஷே விழா. இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்து அறநிலையத்துறையினர் முறையாக திட்டமிடாத செயல்பாடுகளால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரமசிவன் மலை திருக்கோவில். தென்னகத்திலேயே பரமசிவனுக்கு என்று அமைந்துள்ள பழமையான மலைக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் தற்சமயம் தமிழக இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக போடிநாயக்கனூர் ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட பெரியாண்டவர் கோவிலில் இருந்து கும்பாபிசேக கலசம் தீர்த்தங்கள் கொண்டு செல்லப்பட்டு கடந்த ஐந்து நாட்களாக சிறப்பு வேள்வியாகம் நடத்தப்பட்டது.

Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...

அரண்மனை பாரம்பரிய முறைப்படி கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் காலை சரியாக 9.15 மணியளவில் கலசங்களில் புனித தீர்த்தங்கள் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்று ஓம் நமச்சிவாய கோசங்கள் முழுங்க கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்றனர். இந்துஅறநிலையத்துறை மூலம் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் கோபுர பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பத்திரிகையாளர்களுக்கும் இந்து அற நிலையத்துறை அதிகாரிகளுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...

குறிப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்று புனித தீர்த்தம் தெளிப்பதற்கு தயாரானபோது தீர்த்தம் தெளிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டாரை சரி வர சுத்தம் செய்யாமல் மாங்காய்களுக்கு மருந்தடித்த பிறகு அதை அப்படியே தீர்த்தம் தெளிப்பதற்கு பயன்படுத்தியதால் தீர்த்தம் தெளித்த போது கடுமையான மருந்துவாடையுடன் பொதுமக்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு தீர்த்தம் தெளிப்பதை தடுத்து நிறுத்தினர். கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடத்தில் போதுமான வசதி இல்லாததால் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை

800 அடி உயரமுள்ள மலை குன்றில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கோவிலில் பக்தர்கள் சென்று வருவதற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ள நிலையில் உள்ளிருந்து வெளியே செல்பவர்களும் வெளியே இருந்து உள்ளே செல்பவர்களும் முண்டியடித்துக் கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனர். காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் திணறினர்.