கோயில் மாநகராக, தூங்கா நகராக இருந்த மதுரை, கொலை நகராக மாறிவிட்ட அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்றும் இதை தட்டி கேட்காத முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.

ஆர்.பி.உதயக்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அ.தி.மு.க., சார்பில் போதை பொருள் ஓழிப்பு மற்றும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ” மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளது. இதை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய நிலை உள்ளது. அரசியல் காரணங்களுக்காகவும், நகைக்காகவும் கொலைகள் நடக்கின்றது. கொலை, கொள்ளை, நகை, பணம் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை பெரும்பாலும் இளைய சமுதாயத்தினரை குறி வைத்து அவர்களை கூலிப்படைகளாக செயல்பட வைக்கின்றனர்.

- Aadi Festival 2024: ஆடி முதல் வெள்ளி... 301 கிலோ மஞ்சள், 51 அம்மியில் மஞ்சள் அரைத்து காரைக்குடி பக்தைகள் வழிபாடு

கோயில் மாநகரம் - கொலை நகரம்

கோயில் மாநகராக இருந்த மதுரையில் அண்மை காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாக, அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்பது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்காக கடத்தல் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதால் மக்கள் வெளியே வருவதற்கே அச்சத்தோடு இருக்கிறார்கள். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு வாரத்தில் 11 கொலைகள் நடந்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி முதல் நேற்று வரை 11 கொலைகள், தனியாக செல்பவர்களிடம் நகை பறிப்பு, குழந்தைகளை கடத்துவது என தொடர்கிறது. தூங்கா நகரான இந்த மதுரை மாநகரம், இன்று கொலை நகராக மாறிவிட்ட அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். இதை தட்டிக் கேட்க துப்பு இல்லாத மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறோம்” என பேட்டியளித்தார். இதனிடையே சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த திமுக எம்.பி. தங்கதமிழ்ச்செல்வனை பார்த்ததும், அதிமுகவினர் புன்னகைத்து கையசைக்க தங்கதமிழ்ச்செல்வனும் புன்னகைத்து கும்பிட்டவாரு கடந்து சென்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai; 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓ.பி.எஸ்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TNPSC Recruitment: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், 2,030 காலிப்பணியிடங்கள்