கோடை வெப்பத்தில் குளிர்ந்த வருமானம் – வெள்ளரி சாகுபடியில் புதிய பாதை

1 month ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: கோடைப்பட்டத்தில் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டு தினமும் சிறந்த வருமானம் எடுத்து வருகிறார் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர்.

கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும். இந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் தான் செய்ய இயலும். கிணற்றுப் பாசனம் இருந்தால் பம்ப்செட் கொண்டு பாசனம் செய்யலாம். கோடை சாகுபடியை சிறு, குறு விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களை எதிர்பார்க்காமல் தாங்களின் குடும்பத்தினருடன் மேற்கொள்கின்றனர். இதனால் சாகுபடி செலவுகள் குறைகிறது. விவசாயப் பணிகளும் குறிப்பிட்ட சமயத்திற்குள் செய்து முடிக்கப்படுகின்றது.

இதனால் கோடை சாகுபடியில் சிறு, குறு விவசாயிகள் நல்ல லாபத்தினை எடுக்க முடிகின்றது. இதில் விவசாயிகளுக்கு முழுமையாக உறுதுணையாக இருப்பது வெள்ளரி சாகுபடிதான். இந்த வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டு சிறந்த வருமானத்தை பார்த்து வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாதவன் (25).

இந்த வெள்ளரி சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாகவும், பின்னர் பழமாகவும் மாறிவிடுகிறது. வெள்ளரி காய்த்து பிஞ்சாக இருக்கும்போது அது சுவைமிக்கதாக இருக்கும். பிஞ்சு வெள்ளரி மூன்று தரம் கொண்டதாக இருக்கும். மிகச் சிறிய பிஞ்சுகள் நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச் சுவை கொண்டதாக இருக்கும். ஒருவிதை கூட காயில் இருக்காது. இத்தகைய காய்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். இரண்டாம் தரக்காய்கள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். பெரிய பிஞ்சுகள். முதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமமில்லாமல் விற்பனையாகி விடும். சில பிஞ்சுகள் பெரிய காயாகவும், பின்னர் பழமாகவும் மாறும். இவற்றை பக்குவமாக அறுவடை செய்தால் நல்ல விலைக்கு விற்கலாம்.

வெள்ளரிக்காயை களிமண்ணிலிருந்து மணல் கலந்த வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. விதைகளை நடவு செய்வதற்கு, நிலத்தை குறுக்கு – நெடுக்காக நான்கு முதல் ஐந்து உழவு செய்ய வேண்டும். பின்பு, எட்டுக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து, நீளம், அகலம், ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் வரை கிடைக்கும். ஒவ்வொரு குழிக்கும் 2 கிலோ எருவைப் போட்டு, மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.

வடித்தக் கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். விதைகளை இந்தக் கரைசலில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்த விதைகளை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, குழிக்கு ஜந்து விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும். விதைகள் விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். நன்கு முளைத்தவுடன் ஒரு தண்ணீரும், அதன் பின் வாரம் ஒரு முறையும் வாய்க்கால்களின் வழியாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். கூடவே, ஏக்கருக்கு 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலையும் தண்ணீரோடு கலந்துவிட்டால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு கோடைப்பட்டத்தில் வெள்ளரி சாகுபடி செய்து தினமும் ரூ.1000க்கு குறையாமல் வருமானம் ஈட்டி வருகிறார் பட்டதாரி வாலிபர் மாதவன். இதுகுறித்து அவர் கூறுகையில், காய்கறி சாகுபடி செய்து வருகிறோம். கோடைப்பட்டத்தில் வெள்ளரி சாகுபடி செய்து நல்ல வருமானம் கிடைக்கிறது. பிஞ்சு, வெள்ளரிப்பழம் என்ற இதற்கு தனி மவுசு உள்ளது. இதனால் 3 மாத காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதனால் கோடைப்பட்டத்தில் வெள்ளரி சாகுபடியே பிரதானமாகிறது. தினமும் அறுவடை செய்தால் ரூ.800 முதல் ரூ.1000 வரை வருமானம் பார்க்கலாம் என்றார்.

Read Entire Article