கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: IRCTC அறிவிப்பு!

1 month ago 5
ARTICLE AD

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.

ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக அடுத்து வரவிருக்கக்கூடிய கோடை கால விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவிருப்பதாக IRCTC அறிவித்துள்ளது. 7 நாள்கள் பயணத்துக்கான கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 26,300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக IRCTC வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான IRCTC , கோடை விடுமுறையை முன்னிட்டு கோவாவுக்கு சிறப்பு ரயில் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாகச் செல்கிறது. மேற்கூறிய சுற்றுலாத் தொகுப்பில் பிரபலமான தூத்சாகர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதும் அடங்கும்.

மேலும் சுற்றுலா கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 26,300/- லிருந்து தொடங்குகிறது. மே. 1 ஆம் தேதி புறப்பட்டு, மே. 7 திரும்பி வரும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 ஏசி வகுப்பில் ரயில் பயணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற் ஏசி பேருந்து போக்குவரத்து ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article