செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில், கொடுத்த பணத்தை திருப்பி தராததால் கார் ஏற்றி நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களைப் பிரிக்கும் கடன்

நண்பர்களிடம் கடன் வாங்குவது கொடுப்பது என்பது சாதாரண ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் போகும்போது, உறவில் அது மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதேபோன்று நண்பர்கள் இடையே இருந்த கொடுத்தல் வாங்கல் சம்பவம், கொலையில் சென்று முடிவடைந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

இணைபிரியாத நண்பர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்பாபு. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் செங்கல்பட்டு மருத்துவமனையில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரு ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால் நட்பாக பழகி வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

4 லட்சம் கடன்

இந்தநிலையில், சிவராஜ் சரத்பாபுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதனை திருப்பி கேட்ட சரத்பாபுக்கும் சிவாஜிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சரத்பாபு அவர் வீட்டு அருகே சாலையில் நண்பர்களுடன் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மது போதையில் கார் ஓட்டி வந்த சிவராஜ் அமர்ந்திருந்த, சரத்பாபு மீது வேகமாக காரை மோதி உள்ளார்.

கொடூர கொலை நடந்தது எப்படி ?

இதில் படுகாயம் அடைந்த சரத்பாபு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி வந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக சரத்பாபு உயிரிழந்துள்ளார். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில், வைத்துவிட்டு கொலை செய்த சிவராஜ் கைது போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தும், படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில், ஏற்பட்ட விரோதம் காரணமாக பணம் கொடுத்தவரைய கார் ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம், கிராமத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்கள் இடையே கொடுத்தல் வாங்கல் விவகாரத்தில், கொலைச் சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.