"கொங்கு பாரம்பரியத்தின் கம்பீரம்"- கோவையை அதிரவைத்த வள்ளி – கும்மி விழா...

2 hours ago 1
ARTICLE AD

கொங்கு மண்ணின் பாரம்பரிய கலை மரபுகளில் முக்கிய இடம்பிடிக்கும் வள்ளி – கும்மி நடனத்தை உலகளவில் அறிமுகப்படுத்தி வரும் கோவையின் புகழ்பெற்ற வள்ளி முருகன் கலைக்குழுவின் 10-வது ஆண்டு மெகா விழா ரத்தினபுரி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. ஆலமரம் போல் வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் கலைக்குழுவின் விழா, பாரம்பரியக் கலை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

ரத்தினபுரியில் உள்ள அருள்மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு வழிபாடுகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட வள்ளி – கும்மி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சிறுமிகள் முதல் பெண்கள் வரை நூற்றுக்கணக்கானோர் ஒரே நிற பாரம்பரிய உடையில் பங்கேற்று, கைகளில் கும்மித் தாளமிட்டு முருகப் பெருமான் மற்றும் வள்ளியின் வரலாற்றைப் போற்றும் பாடல்களைப் பாடியபடி நடனமாடினர்.

கோவை வள்ளி முருகன் கலைக்குழு 2017-ஆம் ஆண்டு சிறிய அளவில் தனது பயணத்தைத் தொடங்கியது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அரங்கேற்றங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி பாரம்பரியக் கலையை மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.

இக்குழுவின் முதன்மை ஆசிரியர் அனுப்பப்பட்டி பழனிச்சாமி மற்றும் இணை ஆசிரியர்களான ரங்கநாதன், தயாநிதி, மெய்யரசு உள்ளிட்ட மூத்த கலைஞர்கள், வள்ளி – கும்மி நடனத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடர்ந்து பயிற்சிகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனாக, இன்று இக்கலைக்குழு தனது 10-வது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது. பாரம்பரியத்தையும் கலாச்சார அடையாளத்தையும் மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழா, கோவையில் ஒரு மறக்க முடியாத கலாச்சார நிகழ்வாக அமைந்தது.

Read Entire Article