கோலி சோடா ஹீரோ அப்பா ஆகிட்டாரு.. சீரியல் நடிகைக்கு குவியும் வாழ்த்து.. வெளியான புகைப்படம்

5 months ago 4
ARTICLE AD

பசங்க படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கிஷோர். இவர் சீரியல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி வீட்டில் ஒரு மகிழ்ச்சியான தருணம் நடந்திருக்கிறது. இந்த காதல் ஜோடிக்கு சின்னத்திரை மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். என்ன பாஸ் ஒரே ஹேப்பியா என ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தந்த படம்

பசங்க படத்தின் வெற்றியை தொடர்ந்து கிஷோர் கோலிசோடா படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக இருந்தது. அடையாளம் இல்லாத 5 இளைஞர்கள் தங்களுக்கான வாழ்க்கையை நிரூபிப்பது போன்ற கதையாக இருந்தது. இப்படத்தில் நடித்த 5 பேரும் பசங்க படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து கிஷோர் வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

மீண்டும் கோலி சோடா

இயக்குநர் விஜய் மில்டன் கோலிசோடா ரைசிங் என்ற பெயரில் வெப் தொடரை இயக்கியிருந்தார். இந்த வெப் தொடர் கோலி சோடா அளவிற்கு இல்லாவிட்டாலும், சுமாரான கதையாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், நடிகர் சாம், சேரன், விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதிலும் அதே கோலிசோடா பசங்களும் நடித்திருந்தார்கள். 8 எபிசோடாக வந்த இந்த வெப் தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியானது. கிஷோர் இதில் தனக்கான சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

காதல் திருமணம்

நடிகர் கிஷோரும் சன் டி.வியில் ஒளிபரப்பான வானத்தைபோல சீரியல் நடிகை ப்ரீத்தியும் நீண்ட நட்புறவாக பழகி காதலித்து வந்தனர். ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது இளையவர் என்றாலும் காதலுக்கு வயது தடை இல்லை. திருமணத்திற்கு பிறகும் ப்ரீத்தி  தற்போது புனிதா என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் கோலிசோடா பாய்ஸ் அனைவரும் சென்று வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அழகான குழந்தை

சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே ப்ரீத்தி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதன் பிறகு சீரியல்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்நிலையில், ப்ரீத்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ப்ரீத்தி - கிஷோர் தம்பதி தங்களது சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளார். ஹார்ட்டின் எமோஜியுடன் இருவரும் கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Read Entire Article