இந்தியா முழுவதும் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தங்களிடம் கேஸ் சிலிண்டர் இல்லை என நோட்டிஸ் அனுப்பி உள்ளது. எனவே தற்போது இருக்கக்கூடிய இருப்புகளை வைத்து இரண்டு நாட்கள் மட்டுமே தங்களால் தாக்குப் பிடிக்க முடியும். கொரோனா காலங்களில் கூட எங்களால் உணவு தயாரிக்கும் சூழல் இருந்து வந்தது ஆனால் தற்போது ஹோட்டல் இண்டஸ்ட்ரியே மூடு அளவிற்கு தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொருத்தமட்டில் பத்தாயிரம் உணவகங்களில் 5 லட்சம் பணியாளர்கள் இந்த தொழிலை நம்பி இருந்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஹோட்டல் தொழிலை நம்பி இருக்கும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கடும் அவதிக்குள்ளாவர். இந்த நிலை மாற மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை அனைத்து உணவகங்களிலும் நேர கட்டுப்பாடு மற்றும் உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. என உணவக சங்கத்தினர் ஆங்கேங்கே தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் டீ கடைகள், ஓட்டல்கள் செயல்படும் நேரம் வெகுவாய் குறைக்கப்பட்டுள்ளன.

சாலையோர கடைகளைப் பொறுத்தளவில் சிலிண்டர்களையே நூறு சதவீதம் சார்ந்திருப்பதால் இதன் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போரால் தற்போது தேசிய அளவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கு மட்டும் சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 1,500 ஓட்டல்கள் உள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருள் விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பலரும் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.

பெரிய ஓட்டல்களைப் பொறுத்தளவில் விறகு அடுப்புகளை கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சாலையோர கடைகள், டீ, வடை, சிற்றுண்டி, துரித உணவு விற்பனை உள்ளிட்ட வர்த்தகங்கள் சிலிண்டரையே நூறு சதவீதம் சார்ந்துள்ளன. இதனால் இக்கடைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளன.இந்நிலையில், பல கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதாவது டீ கடைகளை மதிய நேரங்களில் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல்களில் உள்ள உணவு வகைகளை வெகுவாய் குறைக்கவும் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து தேனி மாவட்ட ஓட்டல் சங்கத்தினர் கூறுகையில், “மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் 60 சதவீதம் கேஸ் சிலிண்டர் மூலமே உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாலையோர உணவு கடைகள் பெரிதும் பாதிக்கப்படும். விலை உயர்வை கட்டுப்படுத்த ஓட்டல்களுக்கு தடையின்றி சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டும்” என்றார்.