கேரளாவில் கனமழை: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

6 months ago 5
ARTICLE AD

கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதிக்கு மேல் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் அதற்கு  முன்பே 8 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கிவிட்டது. தொடக்கத்திலேயே கேரளா முழுவதும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்தது. இதனால் மழை தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் கேரளா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. அவை ரயில்தண்டவாளங்களில் விழுந்ததால்  நாட்களாக  கேரளாவில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 18 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்ததின் காரணமாக கேரள மின்வாரியத்திற்கு ரூ.180 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து உயர்வதால், தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு விநாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பருவ மழை தொடங்கிய 8 நாட்களில் 15 அடிக்கு மேல் அணையின் நீர் மட்டமானது உயர்ந்தது. இந்நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. அம்மாநிலத்தின் எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு  நேற்று மாலை ஜுன் 11ம் தேதி முதல்  இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்துடன், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 12 -ல் 2 மாவட்டங்களுக்கும், ஜூன் 13 -ல் 4 மாவட்டங்களுக்கும், ஜூன் 14 -ல் 9 மாவட்டங்களுக்கும், ஜூன் 15 -ல் 14 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக  ஜூன் 14 ஆம் தேதி வரை கேரள - கர்நாடகம் - லச்சத்தீவு கடல்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த மே 24 ஆம் தேதி முன்கூட்டியே துவங்கிய பருவமழையால், அம்மாநிலத்தில் மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article