கேரளாவில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், லாட்டரி டிக்கெட் விற்பனையும் பிரபலம். கேரளாவில் காணும் இடமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும். அதிலும் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் எந்த பக்கம் திரும்பினாலும் லாட்டரி கடைகளை பார்த்துவிட முடியும். கேரளாவை பொறுத்தவரை மாநில அரசே லாட்டரிகளை சீட்டுகளை விற்பனை செய்கிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கேரளா லாட்டரி காருண்யா பிளஸ் KN-616 குலுக்கலுக்கான முடிவுகள் இன்று (26-03-2026) வெளியாகியுள்ளன. மிகவும் பிரபலமான இந்த லாட்டரி குலுக்கலில் டிக்கெட் வாங்கியவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை ஆவலுடன் பரிசோதித்து வருகின்றனர். இந்த குலுக்கல் மார்ச் 26, வியாழக்கிழமை அன்று திருவனந்தபுரம் கோர்க்கி பவனில் நடைபெற்றது. லாட்டரி முடிவுகள் மதியம் 3:00 மணியளவில் அறிவிக்கப்பட்டன.

கேரளா அரசின் வாராந்திர லாட்டரி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது. இதன் அதிகப்படியான பரிசுத்தொகை மற்றும் வெளிப்படையான செயல்முறை காரணமாக, ஏராளமான மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இன்றைய லாட்டரி குலுக்கலின் முக்கிய சிறப்பம்சமே ரூ.1 கோடி மதிப்பிலான முதல் பரிசுதான்.

இது PA முதல் PM வரையிலான அனைத்து சீரிஸ்களிலும் இருந்து ஒரே ஒரு அதிர்ஷ்ட டிக்கெட்டுக்கு வழங்கப்படுகிறது. குலுக்கல் முடிந்த பிறகு வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ PDF ரிசல்ட் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களது வெற்றி எண்களை சரிபார்க்கலாம். பரிசை உறுதி செய்ய, ஆறு இலக்க டிக்கெட் எண்ணையும் அதன் சீரிஸையும் சரியாக ஒப்பிட்டுப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறது. அனைத்துப் பரிசுப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான காருண்யா பிளஸ் KN-616 லாட்டரி முடிவுகள், வழக்கமாக மாலை 4:30 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இன்றைய லாட்டரி பரிசு விவரங்கள்

காருண்யா பிளஸ் KN-616 லாட்டரியில் பல பரிசு பிரிவுகள் உள்ளன:

முதல் பரிசு: ரூ.1,00,00,000 - வெற்றியாளர்: PS 246185

இரண்டாம் பரிசு: ரூ.30,00,000 - வெற்றியாளர்: PX 468423

மூன்றாம் பரிசு: ரூ.5,00,000 - வெற்றியாளர்: PT 794167

ஆறுதல் பரிசு: ரூ. 5000 - வெற்றியாளர்: PN 246185 PO 246185 PP 246185 PR 246185 PT 246185 PU 246185 PV 246185 PW 246185 PX 246185 PY 246185 PZ 246185

4வது பரிசு: ரூ. 4000 - வெற்றியாளர்: 5557 4061 8339 8607 8025 2537 3121 7990 3747 4208 0863 0944 3359 0353 8856 1088 9020 4209.

பரிசைப் பெறுவது எப்படி?

வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும். 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும். பான் கார்டு ஜெராக்ஸ், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?

ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்.

ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்.

ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.