கொரிய போரில் இந்திய ராணுவம்! உண்மை சம்பவத்தை உணர்த்தும் நாடகம் - சென்னையில் எப்போது?

10 months ago 7
ARTICLE AD

இந்தியாவிற்கும் உலகில் உள்ள பிற நாடுகளுக்கும் ஏராளமான புவியியல் மற்றும் வரலாற்று தொடர்புகள் நீண்ட காலமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவிற்கும் கொரியாவிற்கும் இடையேயான உறவு மிகவும் தனித்துவமானது.

கொரியப் போரில் இந்திய ராணுவத்தின் பங்கு:

உலகிலே அமெரிக்காவிற்கு சவால் அளிக்கும் நாடாக திகழும் வடகொரியாவிற்கும், அதன் சகோதர நாடான தென்கொரியாவிற்கும் தற்போது வரை மோதல் போக்கு உள்ளது. தென்கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை நடந்த கொரிய போரானது உலகின் மிகவும் முக்கியமான போர்களில் ஒன்றாகும். இதில் தென்கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்காவின் சார்பில் ஏராளமான நாடுகள் பங்கேற்றன.

இதில், அப்போது இந்தியாவும் பங்கேற்றது. தென்கொரியாவிற்கு  ஆதரவாக இந்தியன் கஸ்டடியன் ஃபோர்ஸ் என்ற ராணுவ படைப்பிரிவு அனுப்பப்பட்டது. இவர்கள் கொரியப் போரில் நேரடியாக சண்டையில் ஈடுபடவில்லை. இவர்கள் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்கைதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாடகம்:

இந்திய - கொரிய உறவையும், கொரிய போரில் இந்திய ராணுவத்தின் சேவையையும் உணர்த்தும் விதமாக சென்னையில் நாளை முதல் வரும் 20ம் தேதி வரை நாடகம் நடக்கிறது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள லலித் கலா அகாடமியில் இந்த நிகழ்வு நடக்கிறது. அந்த போரில் அவர்கள் சந்தித்த அனுபவங்கள் இந்த நாடகத்தின் மையக்கருவாக அமைய உள்ளது.

இன்கோ சென்டர், சென்னை போட்டோ பைனாலே எடிஷன் 4மற்றும் ஹுண்டாய் மொபிஸ் ஆகியோர் சார்பில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்திய கஸ்டடின் படைப்பிரிவினர்  சுமார் 6 ஆயிரம் வீரர்கள் இந்த போரில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரிய கலாச்சாரத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் இடையே ஏராளமான உறவுகளும், நெருக்கங்களும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு பண்டைய நூல்களும், வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுகளுமே உதாரணம் ஆகும்.

Read Entire Article