கொடுமை! காதலுடன் சேர்ந்து மனைவி செய்த டார்ச்சர்.. மனம் உடைந்த கணவன் தற்கொலை!

5 months ago 5
ARTICLE AD

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது டோப் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் மாகன். இவரது மனைவி திவ்யா. இந்த ஜோடிக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், திவ்யாவிற்கு கடந்த சில காலமாக வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

டார்ச்சர் செய்த மனைவி:

இதை நிறுத்த மாகன் பல முறை அறிவுறுத்தியும், திவ்யா அதை கேட்கவில்லை. மேலும், தனது காதலுடன் சேர்ந்து காெண்டு திவ்யா மாகனை மிரட்டியுள்ளார். மேலும், தன்னுடைய காதலுடன் சேர்ந்து தனது கணவனிடம் பணம் கேட்டும் திவ்யா மிரட்டியுள்ளார். மாகனிடன் அவரது பூர்வீக நிலத்தை விற்றுத்தருமாறும், அதற்கு தடையாக இருக்கும் அவரது தந்தையை கொலை செய்து விடுமாறும் கொடுமை செய்துள்ளார். இதனால், மாகன் மிக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

மிக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாகன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை கையில் எடுத்துள்ளார். இதையடுத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை:

அதில், நான் எனது வாழ்க்கையை திவ்யாவாலும், அவளது காதலனாலும் முடித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை பணம் கேட்டு கொடுமைப்படுத்தினர். தற்போது அவர்கள் இருவரும் மகாராஷ்ட்ராவில் உள்ள இகத்புரியில் உள்ளனர். எனது தந்தையை கொலை செய்து, பின்னர் எங்கள் பூர்வீக நிலத்தை விற்கவும் என்னை கட்டாயப்படுத்தினார்கள்.

அவர்கள் மும்பையில் நிலம் வாங்க பணம் தேவைப்படுவதால் இதை செய்ய என்னை வற்புறுத்தினார். நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னால் எனது தந்தையை கொலை செய்ய இயலாது. அதனால், என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆனவர்:

மேலும், மாகனின் தற்கொலைக்கு காரணமான திவ்யா ஏற்கனவே திருமணம் ஆனவர். அந்த முதல் கணவர் மூலமாக அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், முறைப்படி திவ்யா அந்த கணவரிடம் இருந்து விவகாரத்து பெறவில்லை. இதை மாகனிடம் இருந்து திவ்யா மறைத்துவிட்டார்.

இதை தனது வழக்கறிஞரிடம் மாகன் தெரிவித்தபோது, அவர் வழக்குப்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மாகன் அப்படி செய்யவில்லை. அதற்கு பதிலாக திவ்யாவின் முதல் கணவரிடம் பணம் கொடுத்து சமரசம் பேசியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகே திவ்யா வேறு ஒரு இளைஞருடன் பழகியுள்ளார். இது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை:

மேலும், தற்கொலைக்கு முன்பு மாகன் வெளியிட்ட வீடியோவில், தனது மரணத்திற்கு பிறகு தனது பெற்றோர்களிடமே தனது மகன் இருக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தி திவ்யாவையும், அவளது காதலனையும் தேடி வருகின்றனர். காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடுமை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 18ம் தேதி நடந்த நிலையில், தற்போதுதான் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Read Entire Article