ARTICLE AD
தூத்துக்குடியில் சிவன் கோயில் என்று அழைக்கக்கூடிய ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவானது வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடத்தப்ட்டு, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 10 ஆம் தேதி காலை 10:45 மணிக்கு நடைபெறும்.
