மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இன்று இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கமல் , விஜய் படங்களை இயக்கியதைத் தொடர்ந்து தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ் , உபேந்திரா , நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது கூலி. இந்நிலையில் கூலி படத்திற்கு தான் வாங்கிய சம்பளத்தை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்

சம்பளத்தை சொன்ன லோகேஷ் கனகராஜ்

" ஒரு படத்தின் வசூலைப் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் முதலில் அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மூன்றாவதாக படத்தின் இயக்குநர். இவர்கள் தவிர்த்து அந்த படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் அடுத்த படத்திற்கு அதே சம்பளம் தான் வாங்கப் போகிறார்கள். அதே நேரத்தில் ஒரு படம் அதிக வசூல் ஈட்டினால் அந்த படத்தின் தயாரிப்பாளர் , நடிகர் மற்றும் இயக்குநரின் சம்பளம் இரண்டு மடங்காக பெரிதாகிறது. லியோ திரைப்படம் ரூ 600 கோடி வசூல் செய்தது. அதனால் கூலி படத்திற்கு எனக்கு ரூ 50 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. கூலி திரைப்படம் 1000 கோடி வசூலிக்கும் என என்னால் உத்தரவாதம் தரமுடியாது. என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள் கொடுக்கும் அந்த 150 ரூபாய் தான் எனக்கு முக்கியம். வசூலை மனதில் வைத்து நான் இந்த படத்தின் கதையை எழுதவில்லை. அப்படி வசூலை நோக்கமாக வைத்து படமெடுப்பவர்கள் நிச்சயமாக கலைஞர்களாக இருக்க முடியாது. கூலி திரைப்படம் 1000 கோடி வசூலித்தால் எனக்கு மகிழ்ச்சிதான் . ஏனால் அது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ரஜினி சாருக்கு பெரிய மார்கெட்டை ஏற்படுத்தி கொடுக்கும் ஆனால் எனக்கு ரசிகர்களின் 150 ரூபாய் தான் முக்கியம். " என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

"Only Hero, Director & Producer should be concerned about BO. Because salary will be multiplied. If I got 50Crs for #Coolie, beacause #LEO collected 600 Crs. I'm not concerned if Coolie will collect 1000 Crs but I'm concerned of audience ₹150👏"
- #Lokesh pic.twitter.com/NKkFBbnI3P

— AmuthaBharathi (@CinemaWithAB) July 14, 2025