கோவை செல்வபுரம் மற்றும் ராஜவீதி பகுதிகளில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை நேரில் பார்வையிட்டார். பூமி பூஜை பணிகள் நடைபெறுவதை அவர் கவனித்து கொண்டிருந்த போது நிகழ்ந்த ஒரு மனிதநேய சம்பவம், அங்கு இருந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

பூமி பூஜைக்கு நடுவே நெகிழ்ச்சி

பூமி பூஜை நிகழ்ச்சிக்கிடையே, அவ்வழியாக சென்ற பசுமாடு ஒன்றை கண்ட வானதி சீனிவாசன், தற்செயலாகவே தனது அலுவல் பணிகளை ஒதுக்கி வைத்து அந்த பசுவிடம் சென்று அன்புடன் பழங்களை வழங்கினார். அவர் பசுவிற்கு வாழைப்பழம் கொடுத்து அக்கறையுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி, அங்கு இருந்த பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சாலையோரத்தில் நின்ற பசுவிடம் அவர் காட்டிய இந்த மனிதநேயமும் எளிமையும் பலரையும் ஈர்த்தது.

இந்த சம்பவம் நடைபெற்ற போது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் கவனித்தனர். எந்நேரமும் தொகுதி மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தி வருவதாக அறியப்படும் வானதி சீனிவாசன், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மத்தியிலும் வாயில்லா ஜீவன்களிடம் காட்டிய இந்த அக்கறை, அவரது பண்பை வெளிப்படுத்துவதாக அங்கு இருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ட்ரெண்டிங் ஆனா "அன்பே சிவம்" வாசகம்

கோவை தெற்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வானதி சீனிவாசன், பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது காட்டிய இந்த எளிமை, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, “அன்பே சிவம்” என்ற வாசகத்துடன் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கும் வானதி சீனிவாசன், இவ்வாறு மனிதநேயத்தை வெளிப்படுத்தும் செயல்களால் பொதுமக்களின் மனதில் தனித்த இடம் பிடித்து வருகிறார். வாயில்லா ஜீவன்களிடம் அவர் காட்டிய இந்த அன்பும் கருணையும், அவரை ஒரு அக்கறை கொண்ட தலைவியாக முன்னிறுத்துவதாக தொகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.