கூட்டு வன்கொடுமை பாதித்த மாணவிக்கு துணை நின்ற காதலன் – திருமணம் செய்ய சம்மதம்

1 month ago 5
ARTICLE AD

கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதம் தெரிவித்து உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார்.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது காதலனுடன் விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகரில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று பேர் காதலனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய மூன்று பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன், கைதான மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு  ஏழு லட்ச ரூபாயும், அரிவாளால் வெட்டப்பட்டு காயம் அடைந்த காதலனுக்கு  2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணை நின்ற காதலன்

இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஜிஷா கூறுகையில், இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகு கல்லூரி மாணவி மன ரீதியாக மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். எனவே அவருக்கு பல்வேறு அறிவுரை கூறி கேட்டறிந்ததாகவும், மருத்துவர்கள் மூலமும் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும், மாணவி தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். மாணவியை மன ரீதியாக தேற்ற காதலன் மிகவும் ஒத்துழைப்பு அளித்ததாகவும் அரசு வழக்கறிஞர் ஜிஷா தெரிவித்தார். இதனிடையே, மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதித்து உள்ளதாகவும் நடந்த கொடூர சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு, மாணவியோடு வாழ்க்கையில் இணைய முடிவு செய்து உள்ளதாக காதலன்  தெரிவித்தாக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜிஷா கூறினார்.

Read Entire Article