குளித்தலை அருகே பாப்பக்காபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பக்காபட்டி கிராமத்தில் மகா மாரியம்மன் விநாயகர், பாலமுருகன், மாரியம்மன், காளியம்மன், பிடாரியம்மன், முண்டி கருப்பு ஒண்டி கருப்பு ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு எடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி கடந்த ஆகஸ்ட் 20ம் அய்யர்மலையில் இருந்து காவிரி நீர் தீர்த்தம் குதிரை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, விக்னேஷ்வர பூஜை, லட்சார்ச்சனை, நாடி சந்தனம், பூர்ணாஹூதி, திரவியாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.

இன்று காலை 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீரினை ஊற்றினர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பாப்பக்காப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்லாயிரகணக்கான பக்தர்களை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விழா.

சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,

தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதைத் தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.