கும்பமேளாவுக்கு சென்ற கார் டயர் வெடித்து விபத்து: 8 பேர் பலி ; எங்கே? எப்படி?

10 months ago 7
ARTICLE AD

ஜெய்ப்பூரில் தடுப்புச் சுவரைத் தாண்டிச் சென்ற கார், பேருந்து மீது மோதியதில் கும்பமேளாவுக்குச் சென்ற 8 பக்தர்கள் உயிரிழந்தனர்.

பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

கார் ஒன்றில் 8 பேர் கும்பமேளாவில் நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது ஜெய்ப்பூரில் உள்ள மோகம்பூரா அருகே தேசிய நெடுஞ்சாலை 48ல் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது.

இதில் நிலை தடுமாறிய கார் தடுப்புச்சுவரை தாண்டி அங்கு வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இதனிடையே மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதற்கு காரணம் உத்தரப்பிரதேச அரசின் நிர்வாகமின்மையே என எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகின்றன.

பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக அரசு தவறிவிட்டது எனவும் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால் கும்பமேளா நிகழ்வு அவ்வளவு பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றனர் எனவும் பாஜக தரப்பு விளக்கம் அளிக்கிறது.

இத்தகைய சூழல் நடைபெற்று வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கும்பமேளாவில் பினித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி நீராடினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article