தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்   கொடைக்கானல் அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது, இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

மேலும் கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த நிலையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Womens T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை சுழலில் சுருட்டிய நியூசிலாந்து - மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேற்றம்

இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள் காட்டுமாடு, சிறுத்தை, அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன. கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது.

இதனால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும், வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் 7 நாட்களுக்கு பின்பு இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளனர். மேலும் தொடர் விடுமுறை என்பதால், 7 நாட்களுக்கு பின்பு திறந்த கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணி ஆர்வத்துடன் உற்சாகத்துடனும் குளித்து மகிழ்ந்தனர்.